ஓர் அதிகாலை வேலை, தீக்கிரயக்கிய உடலுடன் என் தாய் ஆஸ்பத்திரி கட்டிலில் துடித்து கொண்டிருந்தாள். அறையிலும், வெராண்டாவிலும் யாரும் இல்லை. எங்கும் நிசப்த்தமாய் இருக்க, வலுவற்ற நிலையில் என்னை கை அசைத்து அழைத்தாள். மெதுவாய் அவள் அருகே சென்றேன். தாங்க முடியாத வலியின் வேதனையை அவள் முகத்தில் உணர முடிந்தது. நான் படுத்து உறங்கிய மடியின் மேல் தோல் கருகி, இரத்த கலரியாய் கிடந்தது. ஏதோ சொல்லி என்னை ஆசுவாச படுத்த முயற்ச்சித்தாள். எனக்கு அப்போது பண்ணிரண்டு வயது, அவள் மன ஒட்டத்தை முழுதாய் அறிந்து கொள்ள முடியவில்லை. தான் இந்த கட்டத்தை விட்டு மீளப்போவதில்லை என்பதை எப்படியோ அறிந்திருந்தாள். தன் கடமையை பாதியில் முடித்துக்கொள்ளவும் துணிந்துதுவிட்டாள். அப்பா, அக்கா, நான் என மூவரும் செய்வதற்க்கறியா திக்கற்ற நிலையில் நின்றோம்.
மாமா வந்துவிட்டார். என்னால் மீன்டும் சுவாசிக்க முடிந்தது. அது வரையில் இருந்த பீதி சற்றே விலகியது. பிரச்சனைகளின் போது அவரின் வருகை எவ்வளவு முக்கியம் என்று அவர் நினைத்தாரோ தெரியவில்லை… ஆனால் அதை விட பல மடங்கு அதிகமாய் எங்கள் மனம் அதை வேண்டிக்கொண்டிருக்கும். அம்மாவின் உடல் நிலை என்றுமே ஒர் நிலையில் இருந்ததில்லை. பல முறை மயங்கிவிழுவாள், மூச்சு விட முடியமல் திணறுவாள், இதற்கெல்லாம் மேல் அப்பாவுடன் அவ்வப்போது சண்டை வேறு! எல்லா சமையங்களிலும் மாமாவின் உந்துதல் எங்களுக்கு தேவைப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் தன் வேலையை விட்டு வந்து நிற்பதற்க்கு, சகோதரி பாசம் மட்டுமே காரணமாய் இருந்திருக்க முடியாது.
மனிதாபிமானம் என்பது கடைச்சரக்காகி போன இக்காலத்தில், எதையுமே எதிர்ப்பார்த்தே கொடுப்பதை பற்றி யோசிக்கும் உலகமிது. இதில் எந்த ஒரு நிலைமையிலும் கடமையை ஆற்றும் மனநிலையை எனக்கு வாழ்ந்து காட்டினார். கூட பிறந்த ஆறு சகோதரிகளையும் திருப்தி படுத்த அவர் ப்ரஹ்மப்ரய்த்தனை செய்ய வேண்டியிருக்கும். சலிக்காமல் செய்தும் ஏதேனும் ஒரு குறை கூறுவர்...என் அம்மா உட்பட!! குடும்பத்தில் திருமணம், வலைகாப்பு, குழந்தை பிறத்தல் , மஞ்சள் நீர், கிரஹப்ரவேஸம் என ஏதற்க்கும் அவரை விட்டு வைத்ததில்லை. ஆனாள் சுகமான சுமைகள் ஏன அணைத்துக்கும் முன் நின்றார். உறவுகளின் பெருமை அறிந்து, காலம் முழுக்க இப்படியே வாழ அவருக்கு எழுதி வைக்கப்பட்டிருக்கிறது போலும்.
அம்மா எனக்கு சோறூட்டினாள், பாடம் சொல்லித்தந்தாள், தூங்க வைத்தாள், அறவனைத்தாள், எனக்காக கண்ணீர் விட்டாள். இவை அத்தனைக்கும் சேர்த்து எந்த ஒரு ப்ரதி உபகாரமும் செய்ய முடியா வயதில் என்னை தனியே விட்டு உயிர் நீத்தாள். இப்பொது இரத்தமும் சதையுமாய் என் கண்ணில் நின்ற என் தாயை இடுகாட்டில் கிடத்தி தீ வைத்தேன். சடங்கு முடிந்து வீட்டுக்கு வந்ததும் எனக்கு இருந்த வெருமை என் வாழ்வில் வேறெப்போதும் உணர்ந்ததில்லை . இனி வாழ்க்கை பழைய படி இருக்கதென்பது மட்டும் புரிந்தது. என் பண்ணிரண்டு வயதில் என் பால காண்டம் முடிவுற்றது.
அம்மா இறந்த ஒரே ஆண்டிற்குள் அப்பா மருமணம் செய்தார். அக்காவும் நானும் ஒப்புதல் தராதது ஒரு பெரிய பொருட்டாய் தெரியவில்லை. அம்மாவின் நிலையில் வேறொருவரை காண சொல்லி திணித்தார்கள். என் பிடிவாதத்தின் உச்சத்தையும் காட்ட நேர்ந்தது. இத்தனைக்கும் அவர்களுடன் இருந்த கொஞ்ச நாட்களில் சித்தி கொடுமை ஏதும் கூட அரங்கேறவில்லை. என் மேல் எவ்வளவு கரிசனை காட்டியும் ஏனோ என் மூலைக்குள் அது இறங்கவில்லை. ஒர் இழப்பு என் நெஞ்சை கல்லாக்கியிருந்தது. என்னுடைய வீடு என்னதாக தோன்றவில்லை. அம்மா இல்லாத பிள்ளை என பரிவு காட்டிய சொந்தங்கள் யாரும் அறவணைத்துக்கொள்ள தயாராயில்லை, மாமாவை தவிர! அதற்காக யாரையும் நான் குறை கூறவுமில்லை. அவரவர்களின் வாழ்க்கை நிலை அப்படி. விதி விலக்காய் வாழும் இவரை பொதுப்படை உதாரணமாக்குவது நியாயம் இல்லை தான். ஏதோ ஒரு பேரு பெற்று, என் வாழ்வின் இரண்டாம் அத்தியாயம் மாமாவின் வீட்டில் தொடங்கிற்று.
எல்லோரும் போல் எனக்கும் ஒர் குடும்ப சூழ்நிலை கிடைக்கவில்லை. ஒரு வேலை அப்பா, அம்மா, அக்காவின் சுற்றத்திலேயே வளர்ந்திருந்தாள் நான் வேரொருவனாக வார்க்க பட்டிருப்பேனோ என்று எண்ணியதுண்டு. நண்பர்கள் வீட்டில் அதை பார்க்கும்போது மட்டும், சில நொடிகள் அந்த எண்ணம் மேலெழும். ஆனால் எந்தவொரு குறையும் தெரியாமலேயே தான் வளர்ந்தேன். அம்மாவின் நிலையில் அக்காவும் மாமியும் இருந்து, பல நேரங்களில் பித்து பிடித்த என்னை மனிதனாய் மாற்றி இருக்கிறார்கள். நான் செய்த பிழைகளை நெலிவு சுளிவடன் உணர்த்த அவசியம் இல்லாத போதும், என் மனம் நோகவிட்டதில்லை! எதை இழந்தேன் என தெரியவில்லை ஆனால் இங்கு நான் பார்த்த அன்பும் , கற்ற பாடங்களும் நிறைய. அம்மாவிற்கு பிறகு தொடங்கிய இந்த காலம் இதை…. "இதுவும் நண்மைக்கே" என என்மனம் ஏறத்தாழ ஒப்புக்கொண்டுவிட்டது.
அம்மாவை பற்றி எழுத நினைத்தேன். இங்கு வழி மாறி மாமாவை பற்றிய புராணமே வந்து கொண்டிருக்கிறது! காரணம் இல்லாமல் இல்லை. எஞ்சியுள்ள வாழ்வில் நான் அவருக்கு பட்ட கடணை அடைக்க முடியாது, எண்ணியாவது பார்க்கிறேன். நான் கொண்டிருக்கும் அன்பு கைமாறக தோன்றுவது, என்றுமே அவர் காட்டுவதை விடவும் தாழ்ந்தது தான். என் தாய்மாமன் பெருமை சொல்லி புரிவதற்க்கில்லை, உரிமை கொண்டாடுவதை தவிர அன்பு காட்டிட எனக்கு வேறொரு வழியுமில்லை.
சின்னஞ்சிறு வயதில் எது சரி எது தவறு ஏன திட்டவட்டமாய் கூற தெரிந்தது. அப்பா செய்தது தவறு என்று உறுதியாய் நம்பிய காலம் ஒன்று இருந்தது. ஆனால் வயது கூட கூட, அந்த கோடுகள் மெல்ல அழிய தொடங்கி விட்டன. தன் வாழ்க்கை என்ன என்பதை ஒவ்வொருத்தருமே தேர்வு செய்துகொள்ளும் சுதந்திரம் உண்டு. ஆக இதில் நானும் அக்காவும் இல்லாத வாழ்க்கையை, என் அப்பாவேதான் தேர்வு செய்திருகிறார். ஆனால் எந்த நிலையிலும் எங்களை அவர் உதறவில்லை, நாங்களாகவே தான் விலகி நின்றோம். அதன் காயங்களை அவர் சுமக்க, எங்கள் வடுக்களை நாங்கள் சுமக்கிறோம். காலம் இந்த காயங்களை மெதுவே ஆற வைத்திருக்கிறது. இந்நாளில் வயதின் முதிர்ச்சியால், வாழ்கையை பற்றிய கண்ணோட்டம் சற்றே மாறியும் இருக்கிறது. சுற்றும் முற்றும் மனிதர்கள் வாழும் வாழ்க்கை முறைகளை பார்க்கையில், பெரிய கோட்டின் அருகே சிறிய கோடாய் நான் பட்டது அவ்வளவு மோசமாகவும் தெரியவில்லை. தூக்கம் வராத பல இரவுகளில் நெருடலுடன் என்னை நானே கேட்டு கொள்ளும் கேள்வி. “தவறாகவே இருக்கட்டும், அப்பாவை மன்னிக்கும் மனப்பக்குவம் வந்துவிட்டதா?”… மனதார சொல்வேன் “ஆம்” என்று.