Showing posts with label பாரதி. Show all posts
Showing posts with label பாரதி. Show all posts

Sunday, July 31, 2011

படித்ததில் பிடித்தது - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?




தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -
மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப்பலசெயல்கள் செய்து -
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -
பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத் தாயோ?

நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவைநேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் -
இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங்கவலையறச் செய்து -
மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங்கொண்டிருக்கச் செய்வாய்!


 - சுப்பிரமணிய பாரதி